Paristamil Navigation Paristamil advert login

தேவாலயத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் - நாட்குறிப்பில் இருந்து...!!

தேவாலயத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் - நாட்குறிப்பில் இருந்து...!!

12 ஐப்பசி 2017 வியாழன் 15:30 | பார்வைகள் : 18351


பயங்கரவாதத்துக்கும் இறைவனுக்கும் ஏதொரு தொடர்பும் இல்லையென்ற போதும்... சிலர் மதங்களை கொண்டு பயங்கரவாதம் செய்கின்றனர். கடந்த வருடம் பலரை உலுக்கிச் சென்ற ஒரு பயங்கரவாத தாக்குதலை தான் இன்று நினைவு கூர உள்ளோம்...!!
 
அன்று 2016 ஆம் ஆண்டு, ஜூலை 26 ஆம் திகதி.. Normandy மாகாணத்தில் இயற்கை எழில் ஆர்ப்பரிக்கும் Rouvray மாவட்டம்.. அந்த மாவட்டத்துக்கே பெருமை சேர்க்கும் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழையான St-Étienne தேவாலயம் அது!
 
காலை 9.45 மணிக்கு, 19 வயதுடையுடைய மூளைச் சலவை செய்யப்பட்ட இரு பயங்கரவாதிகள் உடம்பில் போலியான ஒரு வெடிகுண்டு பட்டியை அணிந்துகொண்டு கையில் துப்பாக்கியுடன் உள் நுழைந்தனர். 
 
சிலர் சிதறி அடித்து வெளியில் ஓட.. சிலர் தேவாலயத்துக்குள் சிக்கிகொண்டனர். சிக்கியவர்களை பணயக்கைதியாக பிடித்துக்கொண்டார்கள் இருவரும். பிடிக்கப்பட்ட ஆறுபேர்களில், 85 வயதுகளைக் கொண்ட இறைத்தந்தை Jacques Hamel உம் ஒருவர். 
 
இதில், பயங்கரவாதிகள் பார்க்காதவண்ணம் வெளியில் ஓடித்தப்பிய ஒரு பெண்மணி ஒருவர் மகிழுந்து ஒன்றை மறித்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும் படி குறிப்பிட்டார். 
 
சில நிமிடங்களில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வர, பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முனைந்தார்கள். பின்னர் தேவாலயத்துக்குள் காவல்துறையினர் நுழைய முற்பட, பயங்கரவாதிகள் பணயக்கைதிகளை கதவின் அருகில் நிற்கவைத்து மனித கேடயமாக பயன்படுத்தினார்கள். இதனால் காவல்துறையினர் உள்நுழைய சற்று தயங்கினார்கள். 
 
உள்ளே பயங்கரவாதிகள், தங்கள் 'வீர'த்தை படமாக்கினார்கள். அப்பாவி மக்கள் பயந்து நடுங்குவதை ஒளிப்பதிவு செய்தார்கள். அரபு மொழியில் சில சம்பாஷணைகளை மேற்கொண்டார்கள். 
 
பின்னர், பயங்கரவாதிகள் இறைத்தந்தை Jacques Hamel ஐ, மண்டியிட்டு இருக்கச் செய்தார்கள். கமரா தொடர்ந்து ஒளிப்பதிவை செய்துகொண்டிருக்க.. 'அல்லா ஹூ அக்பர்' என முழங்கியவாறே பயங்கரவாதிகளில் ஒருவன் இறைத் தந்தையின் கழுத்தில் கூரான கத்தி ஒன்றை சொருகினான்!! 
 
நாளை..!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்