'Lucie' செயற்கை நுண்ணறிவு தளத்துக்கு உதவும் ஜனாதிபதி மக்ரோன்!

17 மாசி 2025 திங்கள் 14:35 | பார்வைகள் : 1181
அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் தங்களுக்கு என ஒரு செயற்கை நுண்ணறிவு (A.I) தளங்களை உருவாக்கி வரும் நிலையில், பிரான்ஸ் தனது Lucie எனும் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த உள்ளது.
அண்மையில் குறித்த தளத்தினை அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அது தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், அதற்கு தேவையான நிதி உதவியினை அரசு வழங்க உள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்தார்.
”தோல்வியில் எங்களுக்கு ஒரு கலாச்சாரப் பிரச்சனை உள்ளது. அது பிரெஞ்சு மொழி மற்றும் கல்வியில் தொடங்குகிறது. குறைவாக வேலை செய்து தோல்வியை சந்திக்கும் மனப்பாங்கை இல்லாது செய்ய வேண்டும்!” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குறிப்பிட்டார்.
“தோல்வியில் இருந்து மீண்டுவருவது எவ்வாறு என்பதை மிக விரைவாக கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் பந்தயத்தில் இருப்போம்!” எனவும் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.