பத்து நாட்கள் முன்பாகவே ரமழான் நோன்பு.. காரணம் என்ன??!

17 மாசி 2025 திங்கள் 17:36 | பார்வைகள் : 2747
இவ்வாண்டுக்கான ரமழான் நோன்புக்கான திகதியை பரிஸ் பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
ஒரு மாதகால உணவு துறப்பு நோன்புப் பெருநாள் இம்மாதம் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. மார்ச் 29 ஆம் திகதி வரை இந்த நோன்பு கடைப்பிடிக்கப்படும் எனவும், அதன் பின்னர் பிறை பார்க்கப்பட்டு நோன்பு பெருநாளுக்கான திகதி அறிவிக்கப்படும் என பரிஸ் பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
லூனார் நாட்காட்டியில் 355 நாட்களே உள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் ரமழான் திகதி மாறுபடும். இதனால் 2024 ஆம் ஆண்டில் இருந்து பத்து நாட்கள் முன்பாக இம்முறை ரமழான் ஆரம்பமாகிறமை குறிப்பிடத்தக்கது.