Tracfin- பணமோசடிக்கு எப்போதும் வில்லன்!!
11 ஐப்பசி 2017 புதன் 15:30 | பார்வைகள் : 18286
பிரான்சில் பல உளவுத்துறை சேவைகள் கடமையில் ஈடுபட்டு வருகின்றன. பயங்கரவாதம், நாசவேலைகள் என ஒரு பக்கம் உளவுத்துறை இரவு பகலாமக உளவு பார்த்தாலும்... நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் மிக முக்கியமான பிரச்சனை.. பண மோசடி.. அல்லது ஊழல்! இதனை கண்காணித்து வேட்டையாடி.. 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!' என கண்காணிப்பதில் மிக முக்கியமான ஒரு உளவுத்துறை தான் இந்த Tracfin!!
உலகின் பல முக்கிய இராட்சத வியாபார நிறுவனங்கள் அனைத்தும் பிரான்சிலும் தன்னுடைய கிளைகளை பரப்பி வியாபாரத்தை முன்னெடுக்கிறது. இருந்தாலும் அனைத்து நிறுவனங்களும் சரியாக வரி கட்டுகிறதா.. நிதியை எங்கேனும் பதுக்குகிறதா.. போலியான தகவல்களை அரசிடம் ஒப்படைக்கிறதா என கண்காணித்துக்கொண்டே இருக்கும் இந்த துறை. இதுவரை பல முக்கிய 'புள்ளிகளை' புள்ளிவிபரத்தோடு பிடித்துள்ளது.
பிரான்சின் பொருளாதாரம் அமைச்சுக்கு மாத்திரமே இவர்கள் பணியாற்றுவார்கள். இரகசிகம் கருதி, இவர்கள் குறித்த மேலதிக தகவல்கள் இணையத்தளங்களில் வெளியிடப்படவில்லை.
1990 ஆம் ஆண்டில் இருந்து இவர்கள் பல முக்கிய நிறுவனங்களின் ஊழல்கள், பண மோசடிகளை கண்டுபிடித்துள்ளார்கள். அப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் மில்லியன் கணக்கில் வரி கட்டவேண்டும் என சமீபத்திய செய்திகளில் படித்திருப்பீர்களே.. அந்த செய்திகளின் பின்னால் இருப்பவர்கள் இவர்களே!!