வாகன சாரதிகளே 'Citroën C3, DS3' வாகனங்களை செலுத்த வேண்டும்.

18 மாசி 2025 செவ்வாய் 07:52 | பார்வைகள் : 2236
பிரான்சில் தயாரிக்கப்படும் 'Citroën' வாகனங்களில் Airbags எனும் பாதுகாப்பு முறையில் ஏற்பட்டுள்ள தயாரிப்புத் தவறு பலவேளைகளில் விபத்தின் போது Airbags செயல்படாமல் பல சாரதிகள் படுகாயம் அடைந்துள்ளனர். குறித்த விபத்துக்களை சந்தித்த சாரதிகள் 'Citroën' நிறுவனத்தின் மேல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதனையடுத்து 'Citroën' நிறுவனம் குறித்த தயாரிப்புகளை திரும்பப் பெற்று தவறான தொழில்நுட்ப வேலைகளை சரிசெய்த போதிலும் மீண்டும் Airbags செயல்படாமல் பாதிப்புகள் தொடர்ந்துள்ளதாக அறியமுடிகிறது.
இந்த நிலையில் அதிக பாதிப்பான, 2009 முதல் 2013 வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட Citroën C3 மற்றும் DS3 வாகனங்களை வைத்திருக்கும் வாகன உரிமையாளர்கள் அவற்றை பாவனைக்கு உபயோகிக்க வேண்டும் என பெப்ரவரி 17- ம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. என செய்திகள் தெரிவிக்கின்றன.