அதி உச்ச பாதுகாப்பு நிறைந்த சிறைச்சாலைகளை தேடும் நீதி அமைச்சர்.

18 மாசி 2025 செவ்வாய் 07:54 | பார்வைகள் : 3102
முன்னாள் உள்துறை அமைச்சரும், இன்றைய நீதியமைச்சருமான Gérald Darmanin பிரான்சின் பல சிறைச்சாலைகளுக்கு தொடர்ச்சியாக விஜயம் செய்து அதி உச்ச பாதுகாப்பு நிறைந்த சிறைச்சாலைகளை தேடிவருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 14 அன்று Bouches-du-Rhône உள்ள Arles சிறைச்சாலைக்கு சென்று பின்னர் கடந்த திங்கட்கிழமை பிப்ரவரி 17 அன்று Condé-sur-Sarthe உள்ள Orne சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
மிகப்பெரிய, ஆபத்தான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சுமார் 100 பேரை வெளித் தொடர்புகள் இல்லாத தனிமையான சிறைகளில் அடைத்து வைக்கவும், அவர்களின் சகாக்களான மாஃபியாக்கள் சிறைச்சாலைகளில் இருந்து கைதிகளை கடந்த முற்படாத கடுமையான பாதுகாப்பு நிறைந்த இடமாக அவை அமையவேண்டும் எனும் நோக்கில் அவரின் சுற்றுப்பயணம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த சிறைச்சாலைகளின் தொழில் சங்கங்கள் தங்களின் சிறைச்சலைகளை தெரிவு செய்யவேண்டாம் என போர்க்கொடி தூக்கியுள்ளன. ஆபத்தான கைதிகளை சிறைவக்கும்போது சிறைச்சாலைக்கு உள்ளேயும், வெளியேயும், சுற்றுச்சூழலிலும் அதி உச்ச பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும், ஆனால் இன்றைய நிலையில் ஆட்பலமோ, ஆயுதபலமோ தம்மிடம் நிறைவாக இல்லை, இந்த நிலையில் தங்களின் சிறைச்சாலை தெரிவுசெய்யப்பட்டால் தமக்கு பெரும் ஆபத்து என அவை தெரிவித்துள்ளன.
எதிர்காலத்தில், 600 முதல் 700 போதைப்பொருள் கடத்தல்காரர்களை தனிமைப்படுத்த இரண்டு அல்லது மூன்று ஒத்த பாதுகாப்பு நிறைந்த சிறைச்சாலைகளை திறக்க வேண்டும் என Gérald Darmanin தெரிவித்துள்ளார்.