Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு புடின் தயார்

உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு புடின் தயார்

18 மாசி 2025 செவ்வாய் 14:42 | பார்வைகள் : 2532


தேவையானால், ரஷ்ய உக்ரைன் போர் தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய ஜனாதிபதி தயார் என கிரெம்ளின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் அமெரிக்க பிரதிநிதிகளும் ரஷ்ய அதிகாரிகளும் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தைகள் நடத்திவருகிறார்கள்.

வேடிக்கை என்னவென்றால், உக்ரைன் தரப்பில் யாரும் அந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், தேவைப்பட்டால், ரஷ்ய உக்ரைன் போர் தொடர்பில், உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய ஜனாதிபதி தயார் என கிரெம்ளின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஆனால், அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. அது என்னவென்றால், 2024ஆம் ஆண்டு, மே மாதம் 20ஆம் திகதியுடன் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.

இந்நிலையில், உக்ரைன் போர் துவங்கியதுமே உக்ரைனில் ராணுவச் சட்டம் அமுலுக்குவந்துவிட்டது.

ராணுவச் சட்டம் அமுலில் இருக்கும்போது உக்ரைனில் தேர்தல் நடக்கமுடியாது.

ஆகவே, அந்த சட்டப்படி ஜெலன்ஸ்கி இப்போது உக்ரைனின் ஜனாதிபதியே இல்லை என ஒரு கருத்து ரஷ்ய தரப்பில் எழுந்தது.

உக்ரைன் அரசியல் சாசனத்தின்படி அடுத்த ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும்வரை ஜெலன்ஸ்கி உக்ரைன் ஜனாதிபதியாக நீடிக்க சட்டம் அனுமதிக்கிறது.

 உக்ரைன் போர் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது என்னும் விடயம் வரும்போது, முறைப்படி உக்ரைனின் தலைவர் யாரோ அவரிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்னும் பிரச்சினை உருவாகும் என்றும் ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்