சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் மாஸ் தகவல்..!

18 மாசி 2025 செவ்வாய் 14:53 | பார்வைகள் : 840
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தையும் பெரிய நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை பெரிய இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது அவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’மதராஸி’ என்ற திரைப்படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ’பராசக்தி’ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த இரண்டு படத்தையும் முடித்துவிட்டு அவர் தமிழ் திரையுலகின் பிரபல பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பேட்டி எடுத்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி இதனை உறுதி செய்துள்ளார்.
இந்த படத்தை இயக்குவது ஒரு பெரிய இயக்குனர் என்று கூறினாலும் இயக்குனர் பெயரை இப்போதைக்கு அவர் சொல்ல முடியாது என மறுத்துவிட்டார். இருப்பினும் இந்த படம் உருவாகுவது உறுதி என்று கூறப்பட்ட நிலையில் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.