Paristamil Navigation Paristamil advert login

சிம்பு குறித்து பிரபல இயக்குனர் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

சிம்பு குறித்து  பிரபல இயக்குனர் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

18 மாசி 2025 செவ்வாய் 14:58 | பார்வைகள் : 961


தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கி பிரபலமான எஸ் டி சபா மற்றும் இயக்குனர் எழில் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அனுபவத்தை கொண்டு இயக்குனராக மாறியவர் தான் சுசீந்திரன். அந்த வகையில், 2009 ஆம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து வெளியான 'வெண்ணிலா கபடி குழு' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். 

இந்த திரைப்படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், சுமார் 7 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அதே போல் விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாகவும் இந்த திரைப்படம் அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் கார்த்தியை வைத்து சுசீந்திரன் இயக்கிய 'நான் மகான் அல்ல'  திரைப்படம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட ஆக்ஷன் படங்களை பார்க்க நினைக்கும் ரசிகர்களுக்கு தீனி போடும் விதத்தில் அமைந்தது.

அதே போல் சுசீந்திரன் 2011 ஆம் ஆண்டு எழுதி இயக்கிய 'அழகை சாமியின் குதிரை' திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. இந்த படத்தில் காமெடி நடிகர் அப்பு குட்டியை ஹீரோவாக வைத்து, சுசீந்திரன் ஹிட் கொடுத்திருந்தார். இதன் பின்னர், விக்ரமை வைத்து ராஜபாட்டை படத்தை இயக்கி தோல்வியடைந்தார். அதேபோல் ஆதலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி, வில் அம்பு ,என அடுத்தடுத்து பல படங்களை இயக்கி வந்த சுசீந்திரன்... 'ஜீவா' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.

இவர் இயக்கிய திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் அளவுக்கு இதுவரை வசூல் செய்யவில்லை என்றாலும், தயாரிப்பாளருக்கு மோசமான தோல்வியை கொடுத்ததில்லை. இந்த ஆண்டு இவருடைய முதல் திரைப்படமாக '2 கே லவ் ஸ்டோரி' திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்புவை வைத்து 'ஈஸ்வரன்' திரைப்படம் இயக்கும்போது, தனக்கு நேர்ந்த அனுபவத்தை பேட்டி ஒன்று சுசீந்திரன் கூறியுள்ளார்.

நடிகர் சிம்பு சுசீந்திரனை தேடி வந்து, தன்னை வைத்து ஒரு படம் இயக்குபடி கூறியுள்ளார். அந்த சமயத்தில் நடிகர் ஜெய்-க்காக சுசீந்திரன் 'ஈஸ்வரன்' என்கிற திரைப்படத்தின் கதையை எழுதி வந்தாராம். இந்த கதையை கேட்டதும் சிம்பு தூன்னு துப்பிட்டாராம். இதெல்லாம் ஒரு கதையா என்பது போல் சிம்பு யோசித்த நிலையில், பின்னர் இந்த கதையை அப்படியே சிம்புவுக்கு ஏற்ற போல் சில மாஸ் எலமெண்ட்ஸுடன் கூறிய போது, சிறப்பாக இருக்கிறது கண்டிப்பா இந்த படத்தை பண்றோம் என உறுதி அளித்துள்ளார். இதன் பின்னரே 'ஈஸ்வரன்' திரைப்படத்தின் பணிகள் துவங்கியதாக தன்னுடைய பேட்டியில் சுசீந்திரன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்