அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகும் நடிகை ஜான்வி கபூர்?

18 மாசி 2025 செவ்வாய் 15:01 | பார்வைகள் : 1649
பாலிவுட்டின் புதிய தகவலின்படி, ஜான்வி கபூர் அட்லீ இயக்கும் புதிய படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"புஷ்பா 2" படத்தின் வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் இணையவிருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது கால்ஷீட் காரணங்களால் அவர் அட்லீ படத்தில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் நீண்ட நாளாக அட்லீயுடன் பணிபுரிய ஆர்வமாக உள்ளதாகவும், தற்போது அது நிறைவேற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. "ஜூனியர் என்டிஆர்"இன் "தேவரா" படத்தில் இடம்பெற்ற "சுத்தமல்லே" பாடலுக்குப் பிறகு ஜான்வி தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். தற்போது அவர் ராம் சரணின் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அட்லீயின் மனைவி பிரியாவின் பிறந்தநாள் விழாவில் ஜான்வி கலந்துகொண்டார். இந்த விழாவில் பாலிவுட்டின் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். மறுபக்கம் அட்லீ சல்மான் கானுடன் இணையவுள்ளதாகவும், இந்தப் படத்தில் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.