Paristamil Navigation Paristamil advert login

ஈஃபிள் கோபுரத்தின் கீழே பறந்த விமானம்! - வரலாற்றில் இருந்து..!!

ஈஃபிள் கோபுரத்தின் கீழே பறந்த விமானம்! - வரலாற்றில் இருந்து..!!

9 ஐப்பசி 2017 திங்கள் 10:30 | பார்வைகள் : 18304


ஈஃபிள் கோபுரத்தினை வைத்துக்கொண்டு  இந்த மனிதர்கள் செய்யாத சேட்டை இல்லை.. 1912 ஆம் ஆண்டு 'பறவை மனிதன்' என அழைக்கப்பட்ட  , Monsieur Reichelt, அவருடைய சொந்த தயாரிப்பான 'பாரஷூட்'டை சோதிப்பதற்காக.. பல ஆரவாரங்களுடன் இரண்டாம் தளத்தில் இருந்து குதித்தார்.. இது குறித்து முன்னதாக பிரெஞ்சு புதினத்தில் படித்திருப்பீர்கள்...  
 
தற்போது, இந்த கதை கொஞ்சம் வித்தியாசமானது.. ஈஃபிள் கோபுரத்தின் கீழால் விமானத்தால் பறக்க முடியுமா? ஏன் முடியாது.. அதெல்லாம் சர்வ சாதாரணம்.. ஆனால் எதிரே சூரியன் தான் இருந்துவிடக்கூடாது! 
 
1926 ஆம் ஆண்டில் ஒரு நாள்.. பிரபலமான விமானி Léon Collot, இந்த சாகசத்தை நிகழ்த்த திட்டமிட்டார். அதாவது பறந்து வந்த விமானம் ஒன்று ஈஃபிள் கோபுரத்துக்கு கீழால் பறந்து.. மீண்டும் மேலே எழும்பி பறக்கும்.. அதுதான் அந்த சாகச நிகழ்வு. தன் அமெரிக்க நண்பர் ஒருவருடன் பிடித்த பந்தயத்தின் விளைவே இந்த நிகழ்வு.  
 
அன்றைய நாளில், சிறியரக விமானம் ஒன்றினை எடுத்துக்கொண்டு பறந்து வந்தார்  Léon Collot. விமானம் மெல்ல இறங்கி ஈஃபிளுக்குள் நுழைந்தது. அப்போது தான் எதிர்பாராத அந்த சம்பவம் இடம்பெற்றது. எதிரே சூரியன்! கொஞ்சம் கூட விலகாமல் நேரே கண்ணுக்குள் சுளீர் என தாக்க... எதிரே இருந்த எதுவும் Léon Collotக்கு தெரியவில்லை. 
 
ஈஃபிள் கோபுரத்துக்குள் இருந்து வெளியேறிவிட்டோம் என நினைத்து.. விமானத்தை மேலே எழுப்பினார்.. ஈஃபிள் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த வானொலி அண்டனாவின் அடிப்பாகத்தில் மோதுப்பட்டு... விமானம் கட்டுப்பாடை இழந்து எதிரே இருந்த மரம் ஒன்றில் மோதி வெடித்தது. 
 
Léon Collot உடல் கருகி உயிரிழந்தார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்