Paristamil Navigation Paristamil advert login

சமந்தா மீண்டும் காதலில் விழுந்துவிட்டாரா?

சமந்தா   மீண்டும் காதலில் விழுந்துவிட்டாரா?

18 மாசி 2025 செவ்வாய் 15:05 | பார்வைகள் : 1798


 நாக சைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு மணமுடித்தார் நடிகை சமந்தா.  இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு மணவாழ்வில் இருந்து விலகுவதாக இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா திருமணம் முடித்தார்.

தனது முன்னாள் கணவர் திருமணம் குறித்து அண்மையில் நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவரிடம், ‘உங்கள் முன்னாள் துணைவர் உங்களை விட்டு பிரிந்து புதிய வாழ்க்கை பயணத்தை தொடங்கியது குறித்து நீங்கள் பொறாமைப்பட்டுள்ளீர்களா?’ என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சமந்தா, “நான் என் வாழ்க்கையில் பல விஷயங்களை கடந்து வந்திருக்கிறேன். நான் முற்றிலும் ஒரு குணத்திலிருந்து விலகியிருக்க விரும்புகிறேன் என்றால் அது பொறாமை. அது என்னிடம் இருக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்” என்று பதிலளித்தார்.

இதனிடையே, அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சமந்தா, ஹனிபன்னி தொடரின் இயக்குநரும் இரட்டை இயக்குநர்களான ராஜ், டிகே-வில் ஒருவரான ராஜ் நிதிமோருவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். கைகோர்த்திருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் சமந்தா டேட்டிங்கில் இருக்கிறார் என கூறி வந்தனர்.

இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் கேப்ஷனாக, "If I lose my shit, promise not to laugh / If I throw a fit and get photographed / Would you take my side? Would you hold my hand?" என் கைகளை இறுகப்பற்றிக் கொள்வாயா?.. அவர்கள் பொய் சொன்னால் என்னை திரும்ப அனுப்பிவிடாதே.. என்ற அர்த்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

இது பிரபல பாப் பாடகர் செலினா கோமஸ் பாடிய ஹாலிவுட் பாடலின் வரிகள். இதனை நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் காதலில் விழுந்துவிட்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இவை Selena Gomez-ன் Scared Of Loving You பாடலில் வரும் வரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்