சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து 170 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தல்!

18 மாசி 2025 செவ்வாய் 16:05 | பார்வைகள் : 6596
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), ஓமன் மற்றும் பல நாடுகளில் இருந்து கடந்த 48 மணி நேரத்தில் சுமார் 170 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தலை அடுத்து கராச்சியை வந்தடைந்த அவர்களில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்தி வெளியிட்டுள்ளது.
குடியேற்ற ஆதாரங்களின்படி, சவுதி அதிகாரிகள் 94 பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்திற்குள் நாடுகடத்தியுள்ளனர்.
கறுப்பு பட்டியலில் உள்ளவர்கள், யாசகம் பெறுபவர்கள், போதைப்பொருள் வியாபம், சட்டவிரோதமாக தங்கியிருப்பது, சட்டவிரோதமாக வேலை செய்தல், பணியிடத்தில் இருந்து தலைமறைவு, ஒப்பந்தங்களை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, ஐக்கிய அரபு எமிரேட்ஸில், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் பிற மீறல்களுக்காக தண்டனை அனுபவித்த 39 பாகிஸ்தானியர்கள் கடந்த இரண்டு நாட்களில் நாடு கடத்தப்பட்டதாகவும் ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3