Paristamil Navigation Paristamil advert login

காதல் கல்யாணத்தில் முடிந்த ஈஃபிள் கோபுர தற்கொலை முயற்சி!!

காதல் கல்யாணத்தில் முடிந்த ஈஃபிள் கோபுர தற்கொலை முயற்சி!!

6 ஐப்பசி 2017 வெள்ளி 11:30 | பார்வைகள் : 18018


ஈஃபிள் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்வது என புதிதா?! கோபுரம் கட்டிய நாளில் இருந்து பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒருவர் தன்னுடைய நவீன பாரசூட்டை (??!!) சோதனை செய்வதாக முயற்சி செய்து.. பாரஷூட் திறப்பதற்கு பதிலாக மண்டை ஓடு திறந்து உயிரை விட்ட கதை எல்லாம் பிரெஞ்சு புதினத்தில் படித்திருப்பீர்கள்... ஆனால் இந்த கதை கொஞ்சம் புதுசு..!!
 
ஐரோப்பிய Bureau வைச் சேர்ந்த அதிகாரி Alain de Lyrot பத்திரிகையில் உண்மைச் சம்பவங்களை தொகுத்து ஒரு தொடர் எழுதினார். அதில் இருந்து...
 
1964 ஆம் ஆண்டு.. நவம்பர் மாதத்தில் ஒரு நாள்.. 17 வயதுடைய அழகிய இளம் பெண் ஒருவர் ஈஃபிள் கோபுரத்தில் இருந்து குதித்தார். காதல் தோல்வியில் மனம் உடைந்த அந்த பெண்ணின் பெயர்  Christiane. அந்த 'ஜம்ப்' ஈஃபிள் கோபுரத்தின் 338 ஆவது தற்கொலை முயற்சி. அட ராமா...!!
 
Normandy இல் இருந்து பரிசுக்கு வந்த அந்த இளம் பெண்ணுக்கு வாசனைத் திரவியங்கள் விற்பனை செய்வது தான் பணி. சக தொளிலாளி இளைஞன் ஒருவன் மீது காதல் கொண்டாள். திருமணம் செய்துகொள்ளும் நாளில், காதலன் தன் காதலை முறித்துக்கொள்ள, மனம் உடைந்த Christiane, நேரே ஈஃபிள் கோபுரத்துக்கு வந்தாள். 
 
மின் தூக்கியில் நேரே இரண்டாவது தளத்துக்குச் சென்றாள். அங்கிருந்து தரையை பார்க்க மிக பயமாக இருந்துள்ளது. இதனால்.. முதலாவது தளத்துக்கு இறங்கினாள். பின்னர்... யாரும் எதிர்பார்க்காத வேளையில் அங்கிருந்து கீழே குதித்தாள். 
 
ஆனால் அவள் விழுந்தது, கீழே நின்றிருந்த Renault Dauphine மகிழுந்து மீது! ஈஃபிள் கோபுரத்தில் இருந்து குதித்தவர்களில் உயிர் பிழைத்தவர்கள் பட்டியலில் அந்த பெண்ணும் சேர்ந்துகொண்டாள். 
 
ஆனால் கதையில் மிக முக்கியமான திருப்பம் என்னவென்றால்.. மகிழுந்து மேல் விழுந்தாள் இல்லையா.. அந்த மகிழுந்தின் உரிமையாளர் தான் அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றான். பின்னர் சில வாரங்கள் கழித்து குறித்த இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு, திருமணம் செய்துகொண்டதாக Alain de Lyrot குறிப்பிடுகின்றார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்