Paristamil Navigation Paristamil advert login

பெண்களுக்கான புற்றுநோய் தடுப்பூசி; 6 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிப்பு

பெண்களுக்கான புற்றுநோய் தடுப்பூசி; 6 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிப்பு

19 மாசி 2025 புதன் 03:02 | பார்வைகள் : 999


பெண்களுக்கான புற்றுநோய் தடுப்பூசி 5 முதல் 6 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்' என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறை அமைச்சர் பிரதாப் ஜாதவ் தெரிவித்தார்.

இது குறித்து, பிரதாப் ஜாதவ் கூறியதாவது: பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களை எதிர்த்து போராடுவதற்கான, தடுப்பூசி 5 முதல் 6 மாதங்களில் பயன்பாட்டு வரும். 9 வயது முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசி போட தகுதி உடையவர்கள். ஆராய்ச்சிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

நாட்டில் புற்றுநோய் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

நோயை முன்கூட்டியே கண்டறிவதற்காக புற்றுநோய் கண்டறியும் ஆய்வகங்கள் நிறுவப்படும். புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு சுங்க வரி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எந்தெந்த புற்றுநோய்களை எதிராக தடுப்பூசி போடப்படுகிறது என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'மார்பக, வாய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களை கட்டுப்படுத்த போடப்படுகிறது' என பிரதாப் ஜாதவ் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்