புதுக்கடை நீதிமன்ற பகுதியில் துப்பாக்கிச் சூடு - பாதாள உலக கும்பல் உறுப்பினர் பலி

19 மாசி 2025 புதன் 05:47 | பார்வைகள் : 540
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' என்று அழைக்கப்படும் சஞ்சீவ குமார என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற பகுதியில் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
'கணேமுல்ல சஞ்சீவ' 2023 ஆம் ஆண்டு நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவின் கீழ் பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக இன்றைய தினம் கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்காண்டு வருகின்றனர்.