Paristamil Navigation Paristamil advert login

சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசுத்தலைவர் Emmanuel Macron ஆலோசனை.

சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசுத்தலைவர் Emmanuel Macron ஆலோசனை.

19 மாசி 2025 புதன் 07:49 | பார்வைகள் : 1995


அரச தலைவரின் விருப்பத்திற்கும், அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் இழுபறி நிலையில் இருக்கும் மூன்று சட்டங்களை கொண்டு வர பிரஞ்சு மக்களிடம் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசுத்தலைவர் Emmanuel Macron கடுமையாக ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒன்று வதிவிட ஆவணமற்ற குடியேற்ற வாசிகளை தொழிலாளர் பற்றாக்குறை குறையுள்ள வேலைகளில் அமர்த்தி தற்காலிக வதிவிட அனுமத்ப்பத்திரம் வழங்கி ஒழுங்கமைப்பது. 

இரண்டு நோயினால் பாதிக்கப்பட்டு தங்களின் இயங்கும் நிலைகளை இழந்து செயல்பட முடியாமலும், நோயுடன் போராடிவரும் நோயாளிகள் தங்களை கருணைக் கொலை கோருவதும், அதனை நிறைவேற்றுவதும்.

மூன்றாவது சிறுவர்கள் மத்தியில் இன்று அதிகரித்துள்ள வன்முறை செயல்களுக்கு காரணமாக இருக்கும் சமூக வலைத்தளங்களில் இருந்து அவர்களை பாதுகாக்க 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக வலைப்பின்னல்களைத் தடை செய்வது .

போன்ற மூன்று சட்டங்களை நிறைவேற்ற பிரெஞ்சு மக்களின் விருப்பத்தினை பெறும் நோக்கில் இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்த ஆலோசனை நடந்து வருகிறது என செய்திகள் கசிந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்