Paristamil Navigation Paristamil advert login

'Air France' விமானச் சேவையில் பாலியல் பலாத்காரம். விசாரணைகள் ஆரம்பம்.

'Air France' விமானச் சேவையில் பாலியல் பலாத்காரம்.  விசாரணைகள் ஆரம்பம்.

19 மாசி 2025 புதன் 07:51 | பார்வைகள் : 2112


பிரான்சின் விமானச் சேவவையானAir France சேவைகளில் பணிபுரியும்  பணியாளர்கள் மீது உயர் அதிகாரிகள், மற்றும் சக பணியாளர்களால் பாலியல் சீண்டல்கள், பலாத்காரம் முயற்சிகள், அதிகார துஸ்பிரயோகங்கள் நடப்பதாக 'France info' வானொலி சேவை அண்மையில் பல நேர்காணல்கள் அடங்கிய விவரணம் ஒன்றினை வெளியிட்டிருந்தது. இந்த ஒலிபரப்பின் பின்னர் பல உயர் மட்டங்களில் அரசின் மேல் விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் Philippe Tabarot அவர்கள் Air France சேவைகளின் உயர் அதிகாரிகளை பெப்ரவரி 19-ம் திகதி அமைச்சகத்திற்கு அழைத்து பேசியுள்ளார். அதன்பின்னர் 'France info தகவல் தெரிவித்துள்ள அமைச்சர் Philippe Tabarot "ஏர் பிரான்ஸ் மேலாளர்களுடனான இந்த சந்திப்பு இந்த குற்றச்சாட்டுகள் பற்றிய மிகத் துல்லியமான தகவல்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என தெரித்துள்ளதுடன் "France info மேற்கொண்ட  விசாரணையின் கூறுகளை நான் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சருடனான சந்திப்பின் பின்னர் Air France உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகார துஸ்பிரயோகங்கள், பாலியல் சீண்டல்கள், பாலியல் பலாத்காரம் போன்ற வரம்பு மீறிய எந்தவொரு செயலையும் ஏற்றுக்கொள்ள முடியாது, இதுகுறித்து நியாயமான விசாரணை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், "2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், ஏர் பிரான்ஸ் பாலியல் துன்புறுத்தல் அல்லது பாலியல் நடத்தை பற்றிய அறிக்கைகள் தொடர்பான 18 விசாரணைகளை நடத்தியுள்ளது எனவும் 11 ஒழுங்குத் தடைகள் விதிக்கப்பட்டன எனவும், இதில் மூன்று பணிநீக்கங்கள் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்