Nanterre : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!!
.jpg)
19 மாசி 2025 புதன் 08:36 | பார்வைகள் : 1589
வாகனத் தரிப்பிடம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பெப்ரவரி 18, நேற்று செவ்வாய்க்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Boulevard Georges Clémenceau பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் காலை 10.20 மணி அளவில் துப்பாக்கி முழக்கம் கேட்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு நபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில், மகிழுந்து ஒன்றின் அருகே கிடந்துள்ளார்.
உடனடியாக செயற்பட்ட காவல்துறையினர், கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.