Levallois : தீ விபத்தில் பெண் பலி!!

19 மாசி 2025 புதன் 10:23 | பார்வைகள் : 3224
தீவிபத்துக்குள் சிக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் Levallois (Hauts-de-Seine) நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
பெப்ரவரி 18, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 31 rue du Président Wilson எனும் முகவரியில் உள்ள வீடொன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தீயணைப்பு படையினர் மிக வேகமாக செயற்பட்டு தீயை கட்டுப்படுத்தினர்.
இச்சம்பவத்தில் 75 வயதுடைய பெண் ஒருவர் பலியாகியுள்ளார். அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தும் அது பலனளிக்கவில்லை.
ஆறு தீயணைப்பு வாகனங்களில் 22 தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தினர்.