பிரான்சின் முதல் கடிதம் யாரால் அனுப்பப்பட்டது??
5 ஐப்பசி 2017 வியாழன் 17:30 | பார்வைகள் : 18416
பிரான்சில் முதல் கடித சேவை 1477 ஆம் ஆண்டு ஆரம்பித்தது. பதினோராம் லூயி மன்னனுக்கு, அவசரமாக ஒரு தகவலை அவனது உறவினர் ஒருவருக்கு சொல்ல வேண்டி ஒரு அவசரம் ஏற்பட்டது. விஷயத்தை ஒரு தாளில் எழுதினான்... அதை அரண்மனையில் பணி புரியும் ஒருவரிடம் கொடுத்து அனுப்பி... 'விரைவாக கொண்டு சேர்!' என அறிவித்தான்.
பிரான்சின் முதல் கடித சேவை ஆரம்பித்தது!!
இது எப்படி சேவை ஆகும்.. என்ற குழப்பம் வருகிறதா... சொல்கிறோம். குறித்த பணியாளரை, கடிதம் கொண்டு செல்வதற்கு எனவே அரண்மனையில் நியமித்தார். அதற்கு முன்னர் அது போல ஒரு பணி இருக்கவில்லை.
ஒரு குதிரையில் குறித்த பணியாளர் கடிதத்தோடு அமர்ந்திருக்க... குதிரையோட்டி செல்லவேண்டிய இடத்துக்கு குரையை விரட்டுவான். கடிதம் சென்றடைந்தது.
கடிதம் கொண்டு செல்வதற்கான தேவை அதிகமாக, பின்னர், 1576 ஆம் ஆண்டு இந்த சேவை கொஞ்சம் விஸ்தரிக்கப்பட்டது. எப்படி என்றால்.. ஒரு அலுவலகம் ஒதுக்கப்பட்டது... அட... அதுதான் பிரான்சின் முதல் 'அஞ்சல் அலுவலகம்!' ஆனால் அது 16 ஆம் நூற்றாண்டுடன் மூடு விழா கண்டது.
முதல் கடிதம் பதினோராம் லூயி மன்னனால் 1477 ஆம் ஆண்டு அனுப்பட்டது என்பது தெரியும்.. ஆனால் யாருக்கு அனுப்பினார் என்பது குறித்து தகவல் இல்லை!!