அஜித்தின் அடுத்த படத்தில் சிம்ரன் ?

19 மாசி 2025 புதன் 10:59 | பார்வைகள் : 1623
அஜித்தின் அடுத்த படத்தில் சிம்ரன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் 25 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அஜித் மற்றும் சிம்ரன் இணைந்து நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து ரசிகர்கள் உற்சாகமாக உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
அஜித் மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவான ’வாலி’ என்ற திரைப்படத்தில் தான் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அந்த படத்தை அடுத்து ’அவள் வருவாளா’ என்ற படத்தில் இணைந்து நடித்த நிலையில் கடைசியாக கடந்த 2000 ஆண்டு வெளியான ’உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற திரைப்படத்தில் அஜித் - சிம்ரன் இருவரும் இணைந்து நடித்தனர்.
இதனை அடுத்து 25 ஆண்டுகளாக இருவரும் ஒரே படத்தில் நடிக்காத நிலையில் தற்போது அஜித் நடித்து வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் சிம்ரன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் அனேகமாக அவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்கிறார் என்பது தெரிந்ததே.
மேலும் சிம்ரன் நாயகியாக நடித்த ’ஜோடி’ திரைப்படத்தில் தான் த்ரிஷா, சிம்ரனின் தோழியாக ஒரு சின்ன கேரக்டரில் அறிமுகமானார். இந்த நிலையில் தற்போது த்ரிஷா நாயகி ஆக நடிக்கும் திரைப்படத்தில் சிம்ரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.