Paristamil Navigation Paristamil advert login

Salon de l'agriculture 2025 : எங்கே.. எப்போது..??

Salon de l'agriculture 2025 : எங்கே.. எப்போது..??

19 மாசி 2025 புதன் 17:04 | பார்வைகள் : 4044


பரிசில் ஆண்டுதோறும் இடம்பெறும் Salon de l'agriculture விவசாயக் கண்காட்சி பரிஸ் மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு நிகழ்ச்சியாகும். 2025 ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி இன்னும் மூன்று நாட்களில் ஆரம்பமாக உள்ளது.

இந்த நிகழ்ச்சி எதிர்வரும் பெப்ரவரி 22 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாக உள்ளது. மார்ச் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை 9 நாட்கள் கண்காட்சி இடம்பெற உள்ளது.

பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Paris expo Porte de Versailles மைதானத்தில் இந்த கண்காட்சி நாள் தோறும் காலை 7 மணி முதல் இடம்பெறும்.

கண்காட்சியை பார்வையிட மொத்தமாக 600,000 பேர் வரை வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்