Champions Trophy 2025 - கேன் வில்லியம்சன் அவுட், வில் யங் அரைசதம்

19 மாசி 2025 புதன் 17:05 | பார்வைகள் : 1178
சாம்பியன்ஸ் டிராஃபி 2025யின் முதல் போட்டியில் பாகிஸ்தானின் நஸீம் ஷா ஓவரில் கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்தார்.
கராச்சியில் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் முகமது ரிஸ்வான் பந்துவீச்சை தெரிவு செய்தார்.
அதன்படி நியூசிலாந்தின் வில் யங் மற்றும் டெவோன் கான்வே தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இரண்டு பவுண்டரிகளை விரட்டிய கான்வே 8வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். அப்ரார் அகமது வீசிய 3வது பந்தில் அவர் 10 (17) ஓட்டங்களில் கிளீன் போல்டு ஆனார்.
பின்னர் வந்த கேன் வில்லியம்சன் 2 பந்துகளை சந்தித்த நிலையில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். வேகப்பந்து வீச்சாளர் நஸீம் ஷா அவரை வெளியேற்றினார்.
எனினும் நிதானமாக ஓட்டங்களை சேர்த்த தொடக்க வில் யங் அரைசதம் அடித்தார். இது அவரது 11வது ஒருநாள் அரைசதம் ஆகும்.