Paristamil Navigation Paristamil advert login

முதன் முதலாக தொடரூந்தை குண்டு வைத்து தகர்த்த பயங்கரவாதிகள்! - வரலாற்றில் இருந்து..!!

முதன் முதலாக தொடரூந்தை குண்டு வைத்து தகர்த்த பயங்கரவாதிகள்! - வரலாற்றில் இருந்து..!!

4 ஐப்பசி 2017 புதன் 12:31 | பார்வைகள் : 18136


நவம்பர் 2015 ஆம் ஆண்டு தாக்குதல் உங்களுக்கு தெரிந்ததே. பயங்கரவாதிகளின் மிக மோசமான வெறியாட்டம் அது. நேற்றைய பிரெஞ்சு புதினத்தில் 'பிரான்சில் பயங்கரவாதம் ஒரு நீண்ட கால வரலாறு!' என குறிப்பிட்டிருந்தோம். ஐம்பது வருடங்களுக்கு முன்னே ஒரு சம்பவம் இடம்பெற்றது...!! 
 
அல்ஜீரியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே 7 வருட கால யுத்தம் இடம்பெற்றது. Révolution algérienne என அழைக்கப்படும் இந்த யுத்தத்தின் முடிவிலேயே அல்ஜீரியா சுதந்திரம் பெற்றது. (இந்த வரலாறு குறித்து பிறிதொரு பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்..) அல்ஜீரியாவில் பிரெஞ்சு படைகள் தாக்குதல்களில் ஈடுபட... அல்ஜீரியாவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பிரான்சில் ஒரு தொடரூந்துக்கு குண்டு வைத்தார்கள்!! 
 
அன்று ஜூன் 18, 1961 ஆம் வருடம். Marne மாவட்டத்தின் Vitry-le-François நகரில் இருந்து, அருகில் Loisy-sur-Marne நகருக்குச் சென்றுகொண்டிருந்தது அந்த பயணிகள் தொடரூந்து.. நடுவே, Blacy எனும் கிராமத்தின் வயல்வெளிகளுக்கூடாக தொடரூந்து கடக்கும் போது... 'படார்' என்ற பாரிய சத்தத்தோடு வெடித்துச் சிதறியது. 
 
பயங்கரவாதிகள் வைத்த வெடிகுண்டில், 28 அப்பாவி மக்கள் ஏன் எதற்கு என தெரியாமல் உயிரிழந்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 
 
தாக்குதலுக்கு சில நாட்கள் முன்பு, Vitry-le-François தொடரூந்து நிலைய அதிகாரிக்கு கடிதம் வந்தது. அதில் தொடரூந்துக்கு குண்டு வைக்கப்போகிறோம் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. 
 
தாக்குதலின் பின்னர் விசாரணைகள் ஆரம்பித்தது. மிக நீண்டகாலமாக விசாரணைகள் நீடித்தது.. ஆனால் யாரையும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்ய முடியவில்லை.. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் விசாரணை நீடித்தது. 
 
அதற்கு முந்தைய வரலாற்றில் பயங்கரவாதிகள் ஒரு சிலரை இலக்கு வைத்து தாக்கியுள்ளார்கள்.. கடத்தியுள்ளார்கள்.. ஆனால் இது போன்ற ஒரு தாக்குதல் அப்போதுதான் முதன் முதலாக பிரான்ஸ் அறிகிறது...!!
 
உயிரிழந்தவர்களுக்காக பிரெஞ்சு தேசம் அழுது கண்ணீர் வடித்தது!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்