மகரந்த ஒவ்வாமை : நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை!

19 மாசி 2025 புதன் 18:37 | பார்வைகள் : 2157
மகரந்த ஒவ்வாமை காரணமாக நாட்டின் 79 மாவட்டண்ங்களுக்கு ‘சிவப்பு’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண் எரிவு, சுவாசப்பிரச்சனை, ஒவ்வாமை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்ற வாரம் 35 வரையான மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 79 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது. அதேவேளை ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பரிஸ் உட்பட இல்-து-பிரான்ஸ் மாகாணம் முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக RNSA (தேசிய வான் உயிரியல் கண்காணிப்பு வலையமைப்பு நிறுவனம்) தெரிவித்துள்ளது.
தும்மல், இருமல் போன்ற நோய்களுடன், கண் எரிவு, ஒவ்வாமை, வாந்தி, சுவாசப்பிரச்சனை ஏற்படலாம் எனவும், முகக்கவசம் அணிவது கட்டாயமானது எனவும், நீண்டநாள் நோயுடன் இருப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.