Paristamil Navigation Paristamil advert login

பழனிசாமி - மோடி பேச்சு: பன்னீர்செல்வம் அம்பலம்

பழனிசாமி - மோடி பேச்சு: பன்னீர்செல்வம் அம்பலம்

20 மாசி 2025 வியாழன் 03:11 | பார்வைகள் : 817


அ.தி.மு.க., இயக்கம் பிளவுபட்டுள்ளது. தனிப்பட்ட ஈகோவை கீழே போட்டுவிட்டு இணைய வேண்டும்,'' என, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:

கட்சி இணைய வேண்டும்; அப்போதுதான் ஆட்சிக்கு வர முடியும் என, உண்மையான தொண்டர்கள் வருத்தப்படுகின்றனர்.பார்லிமென்ட் தேர்தலில், 7 தொகுதிகளில் அ.தி.மு.க., டெபாசிட் இழந்துள்ளது; 13 தொகுதிகளில் 3வது இடத்துக்கு சென்றுள்ளது.

கன்னியாகுமரியில் நடந்த இடைத்தேர்தலில், ஓட்டு குறைந்து விட்டது. அ.தி.மு.க., தொண்டர்களின் உரிமையை மீட்பதில் குழுவாக செயல்படும் நாங்கள், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம்.

இணைய வேண்டும் என்ற, ஒத்த கருத்துடையவர்களுடன், இன்னும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். பேசிக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் ரகசியம். செங்கோட்டையுடன் பேசுகிறேன் என சொல்ல வேண்டுமா?எப்படியாவது சண்டையை இழுத்து விட வேண்டுமா? தமிழகத்தில் எல்லா கட்சியின் தலைவர்களும், முதல்வர் ஆக வேண்டும் என பேசிக் கொண்டு இருக்கின்றனர். இரு பெரும் தலைவர்களும், உயிரை கொடுத்து காப்பாற்றிய அ.தி.மு.க., இயக்கம் இன்று பிளவுபட்டுள்ளது.

தனிப்பட்ட ஈகோவை உதறி கீழே போட்டு விட்டு, கட்சி நன்றாக இருக்க வேண்டும்; ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், இணைய வேண்டும்.

பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாகவே பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பழனிசாமியிடம் வலியுறுத்திச் சொன்ன விஷயம், 'பன்னீர்செல்வத்துடன் இணைந்து கட்சியை வழிநடத்துங்கள்' என்பதுதான்.

'இருவருக்கு மட்டுமல்ல; கட்சிக்கும் அது தான் பலம். அ.தி.மு.க., மற்றும் இருவருடைய நலனுக்காகவும் சொல்கிறோம்' என்று வலியுறுத்திச் சொன்ன பின்பும் அதை, பழனிசாமி கேட்டு நடக்கவில்லை; தன்னிச்சையாக செயல்பட்டார். விளைவு -- கட்சி, பார்லிமென்ட் தேர்தலிலும் தோல்வி அடைந்தது.

இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்