■ கருத்துக்கணிப்பு : சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்களுக்கு திருமண பதிவு இல்லை!!

20 மாசி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 3762
சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த அகதிகளுக்கு, திருமண பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும் என கருத்துக்கணிப்பு ஒன்றில் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Union des démocrates et indépendants கட்சியைச் சேர்ந்த Stéphane Demilly, முன் மொழிந்த பிரேரணை ஒன்று இன்று செனட் சபையினால் விவாதத்துக்கு விடப்படுகிறது.
அதில் அவர் "சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த ஒருவரால் திருமணம் செய்துகொள்வதை தடுக்கவேண்டும்!" எனும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், "சட்டவிரோத குடியேறிகளின் திருமணத்தை தடுக்கவேண்டுமா?' எனும் கேள்வியை பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டது.
இந்த கருத்துக்கணிப்பில் 75% சதவீதமானவர்கள் 'ஆம்' (OUI) எனவும், 25% சதவீதமானவர்கள் 'இல்லை' (NON) எனவும் தெரிவித்துள்ளனர்.
**
இந்த கருத்துக்கணிப்பு CNEWS, Europe 1 மற்றும் le JDD ஆகிய ஊடகங்களுக்காக l’Institut CSA நிறுவனம் மேற்கொண்டிருந்தது. பெப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் இணையம் வழியாக 18 வயது நிரம்பிய 1,006 பேரிடம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.