Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் பயங்கரவாதம் தோன்றியது எப்போது??!

பிரான்சில் பயங்கரவாதம் தோன்றியது எப்போது??!

3 ஐப்பசி 2017 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18260


ஐரோப்பா முழுவதும் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவுகிறது. குறிப்பாக பிரான்சில்.. இது நீண்டகால பிரச்சனை!!பரிஸ் தாக்குதல்.. நீஸ் தாக்குதலில் இருந்து.. கடந்த ஞாயிறு இடம்பெற்ற மார்செய் தாக்குதல் வரை பல சம்பவங்கள் பதிவாகிக்கொண்டு தான் இருக்கின்றன??! 
 
பிரான்சில் பயங்கரவாதம் எப்போது தோன்றியது?!
 
பிரான்சில் பயங்கரவாதத்துக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது என்பதே உண்மை..!! கிட்டத்தட்ட 1800 ஆம் ஆண்டிலேயே இந்த தாக்குதல்கள் ஆரம்பித்து விட்டன. ஆரம்பத்தில் கொள்கைகளின் அடிப்படையில், தலைமைத்துவத்தை, நிர்வாகிகளை, அதிகாரிகளை கொல்வது பயங்கரவாதிகளின் செயற்பாடுகளாக இருந்தது. 
 
அதன் பின்னர் 1970  ஆண்டுகளில் தான்.. பயங்கரவாதம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. ஏதுமறியா அப்பாவி மக்களை கொல்வது என பயங்கரவாதம் மிக மோசமான நோயாக மாறியது. 1970 ஆம் ஆண்டின் பின்னர்.. பயங்கரவாதத்தினால் 400க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும்.. 1,700க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தும் உள்ளனர். 
 
பிரான்ஸ் அறிந்த முதல் பயங்கரவாத தாக்குதலே மிக மோசமான தாக்குதலாகும். 1800 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி, மாவீரன் நெப்போலியனை ( Napoleon Bonaparte ) கொல்வதற்காக நிகழ்த்தப்பட்டது. 
 
அந்த தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டும், 35 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தும் இருந்தனர். நெப்போலியன் தப்பித்துக்கொண்டார்.  பிரான்சில் முதன் முதலாக பதிவான பயங்கரவாத தாக்குதல் அது!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்