பிரித்தானியாவில் தற்காலிக விசா வழங்கப்படுவதால் உக்ரேனிய அகதிகள் கவலை

20 மாசி 2025 வியாழன் 10:53 | பார்வைகள் : 1356
பிரித்தானியாவில் தற்காலிக விசா வழங்கப்படுவதால் உக்ரேனிய அகதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
உக்ரைனிய அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என ஒரு தொண்டு நிறுவனம் பிரித்தானிய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தனது முழுமையான படையெடுப்பை பெப்ரவரி 2022 அன்று தொடங்கியதை தொடர்ந்து, Ukraine Permission Extension Scheme (UPE) மூலம் அகதிகள் 18 மாதங்கள் வரை தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால், இது நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கவில்லை.
இது குறித்து பதிலளித்த பிரித்தானிய உள்துறை அமைச்சு, உக்ரைன் அரசின் விருப்பத்திற்கேற்ப, அவர்கள் போருக்குப் பிறகு தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளது.
பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை விரும்புவோருக்கு வேறு வழிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Viktoriya Shtanko நிறுவிய இந்த அமைப்பு, Buckinghamshire பகுதியில் உக்ரைனிய அகதிகளுக்கு உதவுகிறது.
அகதிகள் பணியாற்றி, குழந்தைகளை பள்ளியில் சேர்த்து, சமூகத்தில் பங்களிக்க முயற்சிக்கின்றனர்.
"அவர்களே பிரித்தானியாவிற்கு தேவையானவர்கள்" என அவர் தெரிவித்தார்.
"Bosnian அகதிகள் நிரந்தர குடியுரிமை பெற்றதுபோல், இது குறித்து போருக்குப் பிறகு விவாதித்து முடிவு செய்யலாம்" என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் David Lammy கூறியுள்ளார்.
ஜனவரி 2025 - அரசு விசா விதிகளை மாற்றி, உக்ரைனிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பிரித்தானியாவிற்கு அழைத்துச் செல்ல அனுமதி அளித்தது.
UPE விசா மூலம் 18 மாத நீட்டிப்பு கிடைக்கிறது.
உக்ரைனிய அகதிகள் நிரந்தர குடியுரிமை பற்றிய நிச்சயத்தன்மை இல்லாமை காரணமாக கவலையடைந்துள்ளனர்.
அரசு இந்த விசாக்களை எதிர்காலத்தில் மதிப்பீடு செய்யும் என தெரிவித்துள்ளது.