Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ் - மக்கள் தொகை அதிகம் கொண்ட முதல் 10 நகரங்கள்!!

பிரான்ஸ் - மக்கள் தொகை அதிகம் கொண்ட முதல் 10 நகரங்கள்!!

27 புரட்டாசி 2017 புதன் 14:30 | பார்வைகள் : 18236


பிரெஞ்சு மக்கள் தொகை குறித்து தொடர்ச்சியாக பல புதினங்களை அறிந்து வருகிறோம் இல்லையா?? இன்று.. பிரான்சில் உள்ள அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களை பட்டியலிடுவோம்!!
 
10. பத்தாவது இடத்தில் Lille. Nord-Pas-de-Calais மாகாணத்தின் Nord மாவட்டத்தில் உள்ள நகரம் இது. மொத்த மக்கள் தொகை 227,533.
 
09. ஒன்பதாவது இடத்தில் உள்ள நகரம் Bordeaux. Aquitaine மாகாணத்தின் Gironde மாவட்டத்தில் உள்ளது இந்த Bordeaux. மொத்த மக்கள் தொகை 239,399.
 
08. எட்டாவது இடத்தில் Montpellier நகரம் இருக்கின்றது. 264,538 மக்கள் தொகை கொண்ட இந்த நகரம் Languedoc-Roussillon மாகாணத்தின் Hérault மாவட்டத்தில் இருக்கின்றது. 
 
07. ஏழாவது இடத்தில் Strasbourg நகரம் உள்ளது. மொத்த மக்கள் தொகை  272,222.  Alsace மாகாணத்தின் Bas-Rhin மாவட்டத்தில் உள்ளது இந்த Strasbourg. 
 
06. 287,845 மக்கள் தொகையுடன், Pays-de-la-Loire மாகாணத்தின் Loire-Atlantique நகரில் உள்ள Nantes நகரமே மக்கள் தொகை பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. 
 
05. ஐந்தாவது இடத்தில்  Nice நகரம் உள்ளது. Alpes-Côte d’Azur மாகாணத்தின் Alpes-Maritime மாவட்டத்தில் உள்ள இந்த நகரத்தில் 344,064 பேர் வசிக்கின்றனர்.
 
04.  Toulouse நகரம் நான்காவது இடத்தில் உள்ளது. Midi-Pyrénées மாகாணத்தின் Haute-Garonne மாவட்டத்தில் உள்ள இந்த நகரில் மொத்தம் 447,340 பேர் வசிக்கின்றனர். 
 
03. Rhône-Alpes மாகாணத்தின் Rhône மாவட்டத்தில் உள்ள Lyon நகரம் 491,268 மக்கள் தொகையுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 
 
02. இரண்டாவது மக்கள் தொகை கொண்ட நகரம் Marseille. Alpes-Côte d’Azur மாகாணத்தின் Bouches-du-Rhône மாவட்டத்தில் உள்ள Marseilleஇல் மொத்த மக்கள் தொகை 850,636.
 
இப்பொழுது நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள்... ஆம்.. முதல் இடத்தில் சந்தேகமே இல்லாமல்.. தலைநகரம் பரிஸ் தான் உள்ளது. இல்-து-பிரான்சின் தலைநகர்..  பிரான்சின் தலைநகர் என பல்வேறு பெருமைகள் கொண்ட பரிசின் மக்கள் தொகை 2,249,975!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்