வெங்காய சாதம்

20 மாசி 2025 வியாழன் 11:08 | பார்வைகள் : 651
தினமும் என்ன சமையல் செய்யலாம் என்பதே பாதி பெண்களுக்கு பெரிய யோசிக்க வேண்டிய விஷயமாகதான் இருந்து வருகிறது. அப்படி யோசிக்காமல் சட்டென செய்ய கூடிய ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபி தான் வெங்காய சாதம். ஸ்கூல் பசங்களுக்கு, ஆபிஸ் போறவங்களுக்கும் இத பேக் பண்ணலாம், சட்டென ஒரு வெங்காய சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
வெங்காய சாதம் செய்ய தேவையான பொருட்கள் : சமையல் எண்ணெய் நான்கு டேபிள் ஸ்பூன், கடுகு கால் டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் ஒன்று, பெரிய வெங்காயம் மூன்று, மஞ்சள் தூள் கால் ஸ்பூன், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், மல்லித்தூள் ஒரு ஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் இரண்டு டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை ஒரு கொத்து, உப்பு போட்டு வடித்த சாதம் ஒரு ஆழாக்கு.
வெங்காய சாதம் செய்முறை , முதலில் தயார் இந்த ரெசிபிக்கு கால் கிலோ அரிசியை உப்பு சேர்த்து வேக வைத்து சாதமாக வடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வாணலி ஒன்றை எடுத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி ,எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். அதன் பின்னே சோம்பு மற்றும் சீரகத்தையும் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின் காரத்திற்கு தேவையான பச்சை மிளகாயை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி விடுங்கள்.
இதனுடன் மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காய சாதம் என்பதால் கூடுதலாக வெங்காயம் தேவைப்பட்டால் நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள், இன்னும் நன்றாக இருக்கும்.