அமெரிக்காவில் மீண்டும் மற்றொரு விமான விபத்து - 2 பேர் உயிரிழப்பு

20 மாசி 2025 வியாழன் 11:29 | பார்வைகள் : 9200
அரிசோனா விமான நிலையத்தில் இரண்டு சிறிய விமானங்கள் மோதிக் கொண்ட விபத்து ஏற்பட்டுள்ளது.
அரிசோனாவில் உள்ள மாரனா பிராந்திய விமான நிலையத்திற்கு அருகே இரண்டு சிறிய விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்தில் தலா இரண்டு பேர் பயணித்த Cessna 172S மற்றும் Lancair 360 MK II ஆகிய இரண்டு ஒற்றை எஞ்சின் விமானங்கள் ஈடுபட்டுள்ளன.
பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) கூற்றுப்படி, புதன்கிழமை காலை 8:25 மணிக்கு (15:25 GMT) இந்த மோதல் ஏற்பட்டது.
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விசாரணையை தொடங்கியுள்ளது. . ஆரம்பகட்ட தகவல்களின்படி, ஓடுபாதை 12க்கு மேல் விமானங்கள் மோதியதாக X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் தெரிவித்துள்ளது.
மோதலுக்குப் பிறகு, Cessna 172S எந்தவித பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, Lancair 360 MK II ஓடுபாதை 3க்கு அருகில் விழுந்து நொறுங்கியதில் தீ விபத்து ஏற்பட்டது. உயிரிழந்தவர்கள் பற்றிய எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.
கடந்த மாதம், வாஷிங்டன் DC இல் ஒரு ஹெலிகாப்டரும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் மோதிக்கொண்டதில் டஜன் கணக்கானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1