Versailles : ஆப்பிள் காட்சியறை கொள்ளை!

20 மாசி 2025 வியாழன் 11:58 | பார்வைகள் : 1707
Versailles (Yvelines) நகரில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் காட்சியறை கொள்ளையிடப்பட்டுள்ளது. பெப்ரவரி 19, நேற்று புதன்கிழமை காலை இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
rue Maréchal-Foch வீதியில் அமைந்துள்ள ஆப்பிள் காட்சியறைக்கு காலை 10.45 மணி அளவில் நுழைந்த இரு ஆயுததாரிகள் ஊழியரை கைத்துப்பாக்கி ஒன்றினால் மிரட்டி, அங்கிருந்த தொலைபேசிகள், கடிகாரங்கள் போன்றவற்றை திருடிக்கொண்டு சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் அவர்கள் இருவரும் வருகை தந்ததாகவும், பல விலையுயர்ந்த தொலைபேசிகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.