Mistral AI : ஒரு மில்லியன் தரவிறக்கங்களைச் சந்தித்த பிரெஞ்சு செயலி!!
.jpg)
20 மாசி 2025 வியாழன் 16:59 | பார்வைகள் : 6257
அமெரிக்காவின் ChatGPT சீனாவின் DeepSeek போன்று பிரான்ஸ் அறிமுகப்படுத்திய Mistral AI செயலி இதுவரை ஒரு மில்லியன் தரவிறக்கங்களைச் சந்தித்துள்ளது.
iOS மற்றும் Android தொலைபேசிகளில் இயங்கும் இந்த செயலி, செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படுகிறது எனவும், கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்கும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரான்ஸ் தொடர்பிலான துல்லியமான தகவல்களையும் இது தருகிறது எனவும், பிரான்சுக்கு ஏற்றவகையில் தகவல் திரட்டுக்களை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரெஞ்சு மக்களின் பிடித்தமான செயலியாக இது மாறி வருவதாகவும், இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இதனை தரவிறக்கி பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.