கனடாவின் முதல் அதிவேக ரயில் திட்டம்

20 மாசி 2025 வியாழன் 17:35 | பார்வைகள் : 1126
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரொறன்ரோ மற்றும் கியூபெக் சிட்டியை இணைக்கும் முதல் அதிவேக ரயில் திட்டத்தை அறிவித்தார்.
இது கனடாவின் மிகப்பெரிய கட்டமைப்பு திட்டம் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த 1,000 கி.மீ. நீளமான ரயில் பாதை, மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய மின்சார ரயில்களை கொண்டிருக்கும்.
இது ரொறன்ரோ, ஓட்டாவா, மொன்றியல், மற்றும் கியூபெக் சிட்டி போன்ற முக்கிய நகரங்ககளை இணைக்கிறது.
கனேடிய போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த், இதை "தேசிய வளர்ச்சி திட்டம்" என்று குறிப்பிட்டார்.
முதற்கட்டமாக 3.9 பில்லியன் கனேடிய டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் வழித்தடத் தேர்வு Cadence தலைமையிலான கூட்டணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
Via Rail தற்போது பழைய ரயில்களை இயக்கி வருவதால், சரக்குப் போக்குவரத்து ரயில்கள் முன்னுரிமை பெறுகிறது. புதிய அதிவேக ரயில், இந்த சிக்கலை தீர்த்து, விமானங்களுக்கும் கார்கள் பயன்படுத்துவதற்கும் மாற்றாக இருக்கும்.
இந்த திட்டம் எதிர்கால அரசால் மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது, எனவே அதன் செயல்படுத்துதலுக்கான காலக்கெடுகள் குறிப்பிடப்படவில்லை.