பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ மீது வழக்கு!!

21 மாசி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 1795
பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ மீது கலாச்சார அமைச்சரும், பரிஸ் 7 ஆம் வட்டாரத்தின் நகரமுதல்வருமான Rachida Dati வழக்கு தொடுத்துள்ளார்.
பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ, வழக்கறிஞரான Rachida Dati மீது அண்மையில் “வழக்கறிஞராக அவர் நகராட்சி அதிகாரியின் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளார்” என குற்றம்சாட்டியிருந்தார். அதை அடுத்து, இந்த குற்றச்சாட்டினால் கோபமடைந்த Rachida Dati , ஆன் இதால்கோ மீது ‘அவதூறு பரப்புவதாக’ குற்றம்சாட்டி வழக்கு தொடுத்துள்ளார்.
அவர் வழக்கு தொடுத்ததை அவரது வழக்கறிஞர் உறுதிப்படுத்தினார்.
வழக்கறிஞரான Rachida Dati, வரும் நகரசபை தேர்தலில் பரிசில் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.