Paristamil Navigation Paristamil advert login

பிரான்சும் - மதங்களும் - மக்களும்!!

பிரான்சும் - மதங்களும் - மக்களும்!!

25 புரட்டாசி 2017 திங்கள் 13:30 | பார்வைகள் : 18284


பிரெஞ்சு மக்கள் தொகை 66,991,000 (2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி). பிரான்சின் மூவர்ண கொடியின் தத்துவம் உங்களுக்குத் தெரிந்ததே... "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" ஆகிய மூன்றும் தான் அவை!! சகோதரத்துவம் என்பது வெறுமனே பெயருக்காக இல்லாமல்.. பிரெஞ்சு தேசம் அதை முழுமையாக கொண்டுள்ளது. பல்வேறு தரப்பட்ட மதத்தினர் ஒற்றுமையாக இங்கு வாழ்வதே மிகப்பெரும் உதாரணமாகும். 
 
பிரான்சில் உள்ள மக்கள் தொகையில் அதிகளவு வசிக்கும் மதத்தினர் கிருஸ்தவர்கள். மொத்த மக்கள் தொகையில் 63 தொடக்கம் 66 வீதம் வரையானவர்கள் கிருஸ்தவர்கள். 
 
7 தொடக்கம் 9 வீதம் வரையானவர்கள் இஸ்லாமியர்கள். 0.5 தொடக்கம் 0.75 வீதமானவர்கள் பெளத்த மதத்தினர். அதே அளவில் பிரான்சில் யூத மதத்தினரும் வசிக்கின்றனர். 0.5 தொடக்கம் 1 வீதமானவர்கள் பிற மதத்தினரைச் சேர்ந்தவர்கள். 
 
ஆனால், பிரான்ஸ் ஒரு மத சார்பற்ற நாடு என்பது உங்களு தெரியுமா?? இங்கு மதம் தொடர்பான எந்த நியாயங்களும் சேர்க்க முடியாது. குற்றம் என்றால் குற்றம் தான். மதம் சார்பாக எந்த சலுகைகளும் கிடையாது!!
 
இப்படி இருக்க..., மேற்சொன்ன கணக்கில் ஒரு குறிப்பிட்ட வீதத்தினர் குறைகின்றனரே.. அவர்கள் எல்லாம் யார்??!
 
அதாவது பிரான்சில் 23 தொடக்கம் 28 வீதமான மக்கள் மத சார்பற்றவர்கள். தங்களை irréligieux என அடையாளப்படுத்துகிறார்கள். உலக மக்கள் தொகையில் 16 வீதமானவர்கள் தங்களை மதங்களற்றவர்கள் என அடையாளப்படுத்துகிறார்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்