கெட் அவுட் ஸ்டாலின்; பதிவு போட்டு தொடங்கி வைத்தார் அண்ணாமலை

21 மாசி 2025 வெள்ளி 04:54 | பார்வைகள் : 826
கெட் அவுட் ஸ்டாலின் என சமூக வலைதளத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
அவரது அறிக்கை: தி.மு.க., ஆட்சியில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் மற்றும் ஊழல் நடக்கிறது. தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றிவிட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது.
ஜாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைவாத அரசியலை தி.மு.க., அரசு நடத்துகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த தி.மு.க., அரசு விரைவில் மக்களால் வெளியேற்றப்படும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
கெட் அவுட் ஸ்டாலின் என்று அவர் தொடங்கி வைத்துள்ள hash tag அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டிங்கில் வர தொடங்கியுள்ளது. ஏற்கனவே திமுகவினர் கெட் அவுட் மோடி என்ற hash tag உடன் பதிவுகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.