மாணவி ஒருவரை தண்டித்த ஆசிரியர் - நீதிமன்றத்தில்..!

21 மாசி 2025 வெள்ளி 07:37 | பார்வைகள் : 1835
3 வயதுடைய மாணவி ஒருவரை தொடர்ச்சியாக தண்டித்த ஆசிரியர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Frères Voisin எனும் மழலைகள் பாடசாலையில் பயிற்றுவிக்கும் 54 வயதுடைய ஆசிரியர் ஒருவர் சென்ற வருட செப்டம்பரில் மாணவி ஒருவரை தொடச்சியாக தண்டித்துள்ளார். மிக மோசமான
தண்டிப்பு என குறித்த மாணவின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.
அதை அடுத்து, இன்று பெப்ரவரி 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர் பரிஸ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். அவருக்கு குறைந்தது ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.