திருத்தந்தை François உடல் நிலை மேம்பட்டு வருகிறது. பாரிஸ் பேராயர் மகிழ்ச்சி.
21 மாசி 2025 வெள்ளி 07:47 | பார்வைகள் : 5119
கடந்த ஏழு நாட்களுக்கு முன்னர் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு வத்திக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த 88 வயதான திருத்தந்தை François அவர்களின் உடல் நிலை மேம்பட்டு வருகிறது என வத்திக்கான் அறிவித்துள்ளது.
நேற்று மாலை 20/02 திருத்தந்தையின்
நிமோனியா நோய்க் காய்ச்சல் அவரின் உடலில் இல்லை எனவும் அவரின் உடல் நிலை நேரான வழியில் முன்னேறி வருகிறது எனவும் திருத்தந்தை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துமனை தன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் தொடர்ச்சியாக திருத்தந்தையை கவனித்து வரும் கர்தினால் Matteo Zuppi தெரிவிக்கையில் "இன்று (21/02) திருத்தந்தை காலை உணவை எடுத்து கொண்டதுடன் நற்கருணையையும் பெற்றுக்கொண்டார் அதேவேளை தனது கடமைகளில் ஈடுபடவும் மெல்ல ஆரம்பித்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.
இந்த செய்திகள் வெளியானது திருச்சபைக்கும், பிரான்ஸ் கத்தோலிக்க மக்களுக்கும் தனக்கும் நிறைவை தருகிறது என, 26 ஏப்ரல் 2022 திருத்தந்தை François அவர்களால் பரிசின் பேராயராக திருநிலைப்படுத்தப்பட்ட பேராயர் Mgr Laurent Ulrich தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan