ஒரு மில்லியன் கிலோ மீட்டர்கள் சாலை!
22 புரட்டாசி 2017 வெள்ளி 13:30 | பார்வைகள் : 18830
பிரெஞ்சு தேசத்தின் போக்குவரத்துக்கள் எப்போதும் எம்மை ஆச்சரியத்துக்கு உள்ளாக்க தவறுவதில்லை!! அதிலும் சாலைகள்.. பிரெஞ்சு சாலைகளில் பயணிப்பது ஒரு தனி ரசனை!!
உலகில்.. நில பரப்பளவில் என்னைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரான்ஸ் சிறியததாக இருந்தாலும்...போக்குவரத்து விதிகளும்.. சாலைகளும் அசாத்தியமானவை. Autoroutes, Routes Nationales, Routes Départementales என மூன்று விதமான சாலைகள் பிரான்சில் உள்ளன. இவை அனைத்தின் மொத்த நீளம் எத்தனை கிலோ மீட்டர்கள் தெரியுமா?
1.02 மில்லியன் கிலோ மீட்டர்கள்.. (பிரான்சுக்குள் மட்டும் ). மலைப்பாக இருக்கின்றதா? உண்மை தான். உலக நாடுகளில் பிரான்சுக்கு எட்டாவது இடம். சும்மா ஒரு தகவலுக்காக சொல்கிறோம்.. முதலாவது இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. மொத்தம் 6.58 மில்லியன் கிலோ மீட்டர்களாம்...!!
மேலே சொன்ன மூன்று வகையான வீதிகளையும் A, N, D என எழுத்துக்களில் வகைப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக பிரெஞ்சு புதினத்தில்.. பிரான்சின் மிக நீளமான சாலை குறித்த தகவல்கள் வழங்கியிருந்தோம். 11,400 கிலோமீட்டர்கள் நீளமுடைய அந்த சாலை.. ஐரோப்பாவின் பல நாடுகளுக்குள் பயணிக்கிறது.
பிரான்சில் பரிசில் இருந்து Bordeaux செல்லும் A10 சாலை மொத்தம் 549 கிலோமீட்டர்கள் தூரம் பயணிக்கிறது. பிரான்சுக்குள் இது மிகப்பெரும் சாலையாகவும் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் A89 சாலை இருக்கிறது.