கட்டுமானப்பணிகளின் போது சிக்கிய தங்கக்கட்டிகள்!!

21 மாசி 2025 வெள்ளி 09:02 | பார்வைகள் : 2767
கட்டுமானப்பணிகளுக்கான நிலத்தை தோண்டும்போது, கிட்டத்தட்ட ஒரு கிலோ எடையுள்ள இரண்டு தங்கக்கட்டிகள் சிக்கியுள்ளது.
இச்சம்பவம் Maine-et-Loire மாவட்டத்தின் Angers நகரில் இடம்பெற்றுள்ளது. பெப்ரவரி 18 ஆம் திகதி அன்று அங்கு கட்டுமானப்பணிகளுக்காக நிலத்தை தோண்டும் போது 998 கிராம் எடையுள்ள இரண்டு தங்கக்கட்டிகளை பணியாளர்கள் கண்டெடுதுள்ளனர். தோலினால் செய்யப்பட்ட பை ஒன்றில் கட்டப்பட்டு, ஒருசில ஆவணங்களும் குறித்த தங்க கட்டிகளும் இருந்துள்ளன.
தங்க கட்டிகளில் அடையாள இலக்கம் பொறிக்கப்படிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் முன்னர் வங்கி ஒன்று இருந்ததாகவும், அதன் பாதுகாப்பு பெட்டகம் நிலகீழ் சுரங்கத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வங்கியை அங்கிருந்து இடமாற்றும் போது தங்கக்கட்டிகள் விடுபட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டு தங்கக்கட்டிகள் ஒப்படைக்கப்பட்டன.