தனது மனைவியை அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல்

21 மாசி 2025 வெள்ளி 09:51 | பார்வைகள் : 682
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலும், அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் விவாகரத்து பெற்றதாக சமீப காலமாக செய்திகள் பரவி வந்தன.
அதற்கு ஏற்றாற்போல் இருவரும் இணையத்தில் ரகசிய பதிவுகளைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் பிரிந்து சென்றுவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில் சாஹலும், தனஸ்ரீயும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று விட்டனர். பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் இருவரும் நேரில் ஆஜராகினதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சாஹல் இறுதிவிசாரணைக்கு சற்று முன்பு சமூக ஊடகங்களில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "கடவுள் என்னை எண்ண முடியாத அளவுக்கு அதிகமான முறை பாதுகாத்துள்ளார். எனவே நான் மீட்கப்பட்ட நேரங்களை நான் கற்பனை செய்து பார்க்க மட்டுமே முடியும். கடவுளே, எனக்கு தெரியாதபோதும் கூட, எப்போதும் அங்கே இருப்பதற்கு நன்றி. ஆமென்" என தெரிவித்தார்.