வட மாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

21 மாசி 2025 வெள்ளி 10:05 | பார்வைகள் : 792
வட மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வியாழக்கிழமை (பெப்ரவரி 27) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யும் இந்து பக்தர்களின் மதப் பண்டிகையான மகா சிவராத்திரி, எதிர்வரும் பெப்ரவரி 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்நிலையிலேயே, வட மாகாண ஆளுநர் என்.வேதநாயகம் விசேட விடுமுறையை அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் மார்ச் மாதத்தின் முதல் சனிக்கிழமை விடுமுறைக்குப் பதிலாக வகுப்புகளை நடத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.