சாம்பியன்ஸ் டிராஃபியில் புதிய சாதனை படைத்த விராட் கோஹ்லி

21 மாசி 2025 வெள்ளி 13:18 | பார்வைகள் : 238
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச் செய்த இந்திய வீரர் எனும் சாதனையை விராட் கோஹ்லி படைத்துள்ளார்.
துபாயில் நேற்று நடந்த வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய வீரர் விராட் கோஹ்லி (Virat Kohli) இரண்டு கேட்ச்கள் செய்தார்.
இதன்மூலம் அவர் அதிக கேட்ச்கள் பிடித்த இந்திய வீரர் எனும் சாதனையை படைத்தார்.
298 போட்டிகளில் கோஹ்லி 156 கேட்ச்கள் செய்துள்ளார். அவருக்கு முன்பாக முகமது அசாருதீன் 334 போட்டிகளில் 156 கேட்ச்கள் செய்திருந்தார்.
சர்வதேச அளவில் மஹேல ஜெயவர்த்தனே 218 கேட்ச்கள் (448 போட்டிகள்) செய்து முதலிடத்தில் உள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் ரிக்கி பாண்டிங் 160 கேட்ச்கள் (375 போட்டிகள்) செய்துள்ளார்.