மிசிசாகாவில் வாகன விபத்து - பெண் பலி

21 மாசி 2025 வெள்ளி 13:28 | பார்வைகள் : 1740
மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த 20 வயது இளம்பெண் உயிரிழந்ததாக பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் ஊடகமொன்றினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு பெண் சாலையை கடக்கும்போது, வேகமாக வந்த SUV வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தை மேற்கோண்ட நபர் வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.
விபத்துக்குள்ளான இளம்பெண் படுகாயங்களுடன் அவசர மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
சில காலம் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என பொலிசார் புதன்கிழமை உறுதிப்படுத்தினர்.