பிரான்சில் போலி பணத்தாள்களின் பயன்பாடு அதிகரிப்பு!!

21 மாசி 2025 வெள்ளி 14:01 | பார்வைகள் : 1977
பிரான்சில் புழக்கத்தில் உள்ள போலி நாணயத்தாளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் ஒவ்வொரு ஒரு மில்லியனுக்கும் 16 போலி தாள்கள் இருந்த நிலையில், சென்ற ஆண்டு அது 118 ஆக அதிகரித்துள்ளது.
சென்ற ஆண்டில் 554,000 மதிப்புள்ள போலி நாணயத்தாள்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், சென்ற 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் (அவ்வாண்டில் ஒவ்வொரு ஒரு மில்லியனுக்கும் 64 தாள்கள் அடையாளம் காணப்பட்டது) தற்போது புழக்கம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.