Paristamil Navigation Paristamil advert login

Opération Victor - GIGN படையினரின் அதிரடி சாகசம்!! - நேற்றைய தொடர்ச்சி!!

Opération Victor - GIGN படையினரின் அதிரடி சாகசம்!! - நேற்றைய தொடர்ச்சி!!

21 புரட்டாசி 2017 வியாழன் 11:30 | பார்வைகள் : 18118


கடந்தப்பட்ட பணையக்கைதிகளை மீட்டு... குறித்த கடத்தல் கும்பலை வேரறுக்கும் பணி GIGN படையினரிடம் வழங்கப்பட்டது. 
 
மே மாதம், 4 ஆம் திகதி இரவு பத்து மணி! 
 
12 GIGN வீரர்கள். 15 Marine Nationale க்கு சொந்தமான frogmen கமாண்டோ வீரர்கள், 30 11e régiment parachutiste de choc (பாராஷூட்) வீரர்கள், 3 EPIGN வீரர்கள்... மொத்தமாக களத்தில் இறங்கினார்கள். 
 
Ouvéa தீவில் பணயக்கைதிகளை ஆயுத முனையில் வைத்துக்கொண்டு கடத்தல் காரர்கள் இரவு பொழுதை கழித்துக்கொண்டிருந்தனர். சில பல காட்டு மிருகங்கள் மாத்திரம் வசிக்கும் அந்த தனித்தீவில் உள்ள ஒரு குகையினுள் இருந்த அவர்களால்... அங்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு விமானம் வந்து இறங்குவதை தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கவில்லை. 
 
விமானத்தில் வந்து இறங்கியவர்கள் GIGN படையினர். ஆயுதங்கள் வெடிப்பொருட்கள் அனைத்தும் தயாராக இருக்க... சூரிய உதையத்துக்காக காத்திருந்தனர். காலை 6 மணி.. சாவகாசமாய் விடிய.. அடுத்த 15 நிமிடத்தில் சரவெடி ஆரம்பித்தது. அப்போது GIGN படையினர் கடத்தல்காரர்களுக்கு 300 மீட்டர்கள் தொலைவில் இருந்தனர். 
 
இயந்திர துப்பாக்கி குண்டுகள் கோதுகளை வெளியில் கக்க, இலக்கை தாக்கி அழித்தது. கடத்தல்காரர்களும் பதிலுக்கு தாக்கினார்கள். ஆனால் பிரெஞ்சு படையினரின் அதிரடிக்கு முகம் கொடுப்பது பெரும் சிரமமாய் போக.. கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். 
 
GIGN படையினர் இப்போது 50 மீட்டர்கள் இடைவெளியில் இருந்தனர். Kanak படையினருக்கு என்ன செய்வது என தெரியவில்லை. அவர்களிடம் இருந்த துப்பாக்கியை விட மிக நவீன ஆயுதங்கள் இருந்தன. இப்போது அவர்கள் தப்பி ஓடுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. அதை செய்தனர். 
 
ஆனால், சிறிது நேரத்துக்குள்ளாக  உயிரிழந்த கனாக் படையினர் தவிர மீதி அனைவரும் சரண் அடைந்தனர்.  
 
சண்டை முடிவில், 19 கடத்தல்காரர்கள் உயிரிழக்க.. மீதமுள்ளவர்களையும், கடத்தபட்டவர்களையும் ஏற்றிக்கொண்டு அந்த தீவில் இருந்து புறப்பட்டது அந்த விமானம். 
 
GIGN  படையினரின் மிக முக்கியமான இந்த மிஷனை அப்படியே திரைப்படமாக்கினார்கள். L’ordre et la morale என்ற அந்த திரைப்படம் திரையரங்கில் சக்கை போடு போட்டது!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்