கனடா பிரதமரை ஆளுநர் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப்

21 மாசி 2025 வெள்ளி 15:10 | பார்வைகள் : 728
கனடாவை மீண்டும் அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்று கூறி வம்புக்கிழுத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
கனடாவை அவ்வப்போது அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்று கூறி வம்புக்கிழுத்துவந்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
இந்நிலையில், மீண்டும் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்றும், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை கனடா ஆளுநர் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.
இம்முறை சற்று சீரியஸாகவே அவர் இடுகை ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளதுபோல் தெரிகிறது.
அதாவது, கேலி செய்வது போல் பேசாமல், சீரியஸாகவே கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்றும், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை கனடா ஆளுநர் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.
கனடா ஹாக்கி அணிக்கெதிராக அமெரிக்க அணி விளையாடுவது தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், விரைவில் நமது 51ஆவது மாகாணமாக ஆக இருக்கும் கனடாவை எதிர்த்து விளையாடும் அமெரிக்க அணியை உற்சாகப்படுத்துவதற்காக அவர்களுக்கு இந்த செய்தியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆளுநர்கள் சந்திப்பு இருப்பதால் என்னால் போட்டியைக் காண நேரில் வரமுடியாது.
ஆனால், எல்லோரும் போட்டியைக் காண்போம். போட்டியைக் காண கனடா ஆளுநரான ட்ரூடோவும் நம்முடன் இணைந்துகொள்வாரென்றால், அவரை மனதார வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப்.
ஆனால், ட்ரம்புக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
விடயம் என்னவென்றால் அந்த ஹாக்கி போட்டியில் கனடா அமெரிக்காவை 3க்கு 2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்துவிட்டது.
அதைத் தொடர்ந்து சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ட்ரூடோ, நீங்கள் எங்கள் நாட்டை எடுத்துக்கொள்ளமுடியாது, விளையாட்டிலும் எங்களை ஜெயிக்க முடியாது என சுடச்சுட பதிலளித்துள்ளார்.